வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: செவ்வாய், 20 ஜூன் 2023 (15:58 IST)

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்.. புதுச்சேரி ரசிகர்கள் போஸ்டரால் பரபரப்பு..!

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் என்று விஜய்யின் புகைப்படத்துடன் கூடிய போஸ்டரை புதுச்சேரி விஜய் ரசிகர்கள் பல பகுதிகளில் ஒட்டி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டும்தான் நடிகர்கள் அரசியலுக்கு வருவதை விரும்பி வருகின்றனர் என்பதும் பெரிய நடிகர்கள் எல்லோருமே கிட்டத்தட்ட முதலமைச்சர் கனவில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 
ரஜினிகாந்த் கமலஹாசன் விஜயகாந்த் சரத்குமார் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் தமிழகத்தில் முதலமைச்சர் கனவுடன் இருந்துள்ளனார் என்பதும் ஆனால் யாருக்குமே இந்த கனவு பலிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்த வகையில் தற்போது விஜய்க்கு முதலமைச்சர் கனவு வந்துள்ள நிலையில் விரைவில் அவர் அரசியலில் குதிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் விஜய்யின் ரசிகர்கள் இப்போதே விஜய்யை முதலமைச்சர் அளவுக்கு கற்பனை செய்து வருகின்றனர் 
 
அந்த வகையில் புதுவை விஜய் ரசிகர்கள் தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் என்று புகைப்படத்துடன் கூடிய போ ஸ்டரை ஒட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.
 
Edited by Siva