வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sinoj
Last Modified: திங்கள், 27 செப்டம்பர் 2021 (22:12 IST)

’விஜய் மக்கள் இயக்கம்’ கலைக்கப்படவில்லை- விஜய் தரப்பு தகவல்

விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்பட்டு விட்டதாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விஜய்யின் தந்தை இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் பதில் மனு அளித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் தளபதி விஜய் தனது பெயரை பயன்படுத்தி கூட்டங்களை நடத்த தந்தை எஸ்ஏ சந்திரசேகர், தாயார் ஷோபா உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளுக்கு தடை கோரி வழக்கு தொடர்ந்தார்

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எஸ்.ஏ சந்திரசேகர் தரப்பில் இருந்து பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் விஜய் மக்கள் இயக்கத்தை இயக்கத்தைக் கலைக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் விஜய் ரசிகர்கள் மட்டுமே அனைவரும் தொடர்வதாக பதில் மனுவில் விளக்கம் அளித்துள்ளது.

இந்த நிலையில் இந்த வழக்கு மீண்டும் அக்டோபர் 29-ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் விஜய் ரசிகர்களுக்கு எஸ்.ஏ.சந்திரசேகரின் அறிவிப்பு குழப்பத்தை ஏற்படுத்திய நிலையில்  தற்போது விஜய் தரப்பில் இதுகுறித்த முக்கிய தகவல் வெளியிட்டுள்ளது: அதில்,விஜய் மக்கள் இயக்கம் கலைக்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டது.