1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Modified: வெள்ளி, 2 பிப்ரவரி 2024 (17:15 IST)

விஜய்க்கு வெற்றி கிடைக்கும்: அம்மா ஷோபா சந்திரசேகர் வாழ்த்து..!

தளபதி விஜய் இன்று அரசியல் கட்சியை தொடங்கி இருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துக்கள் மற்றும்  விமர்சனங்கள் எழுந்து வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர் இது குறித்து பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது:

விஜய் பற்றிய பல கேள்விகளுக்கு நான் பதில் கூறியிருக்கிறேன். அவரது அரசியல் வருகை குறித்து ஒரு அம்மாவாக சமூக பொறுப்புள்ள பெண்மணி ஆகவும் நான் சொல்ல வேண்டியது அவசியம். எனக்கு அரசியல் தெரியாது என்று சொல்ல மாட்டேன். ஒவ்வொரு குடிமகனுக்கும் குடிமகனுக்கும் அரசியல் தெரிந்திருக்க வேண்டும்.

விஜய் மாதிரி ஆளுமை உள்ளவர்கள் கண்டிப்பாக அரசியலுக்கு வரவேண்டும். பொதுவாக புயலுக்கு பின் அமைதி என்று கூறுவார்கள். ஆனால் விஜய்யின் அமைதிக்கு பின் ஒரு புரட்சி ஏற்படப்போகிறது.

அவரது அம்மாவாக நான் அவருக்கு ஓட்டு போட மிகவும் சந்தோஷமாக காத்திருக்கிறேன். விஜய்க்கு ஜாதி மதம் கிடையாது. அவரது ரசிகர்கள் தொண்டர்களாக மாறி உள்ளார்கள், அடுத்து தலைவர்களாகவும் மாறுவார்கள், வெற்றி வாகை சூடு விஜய் என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Edited by Siva