1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. former minister jayakumar says about vijay political entry

அரசியல் என்பது பெருங்கடல்: விஜய் கரை சேர்கிறாரா, மூழ்கப் போகிறாரா? ஜெயகுமார்

விஜய்
அரசியல் என்பது பெரும் கடல் என்றும் அதில் விஜய் கரை சேர்கிறாரா? அல்லது மூழ்கப் போகிறாரா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் என்றும் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார் 
 
நடிகர் விஜய் சற்றுமுன் தனது அரசியல் கட்சி பெயரை வெளியிட்டார் என்பதும்  அது குறித்த தகவல்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 
 
இந்த நிலையில் விஜய்யின் அரசியல் கட்சி குறித்து பல்வேறு தலைவர்கள் கருத்து தெரிவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருங்காலத்தில் விஜய் மற்றும் உதயநிதி அல்லது விஜய் மற்றும் அண்ணாமலை என தமிழக அரசியல் இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 
 
இந்த நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார், விஜய்யின் அரசியல் குறித்து கூறிய போது அரசியல் என்பது பெருங்கடல், அதில் நீந்தி கரை சேர்ப்பவர்களும் உண்டு, மூழ்கி போகிறவர்களும் உண்டு, இதில் விஜய் அரசியல் என்ற பெருங்கடலில் கரை சேர்கிறாரா? அல்லது மூழ்க போகிறாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம் என்று கூறியுள்ளார்.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
இந்திய அளவில் ட்ரெண்டாகும் #தமிழகவெற்றிகழகம்.. மாஸ் காட்டும் விஜய் ரசிகர்கள்..!