திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By sivalingam
Last Modified: சனி, 19 ஆகஸ்ட் 2017 (05:05 IST)

மீண்டும் ஜூலி! சக்தி செய்த ரெகமண்டேஷன்

பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய ஜூலி மற்றும் சக்தி தற்போது தாங்கள் செய்த தவறுகளை உணர்ந்துள்ளார்களாம். இருக்கின்ற கொஞ்ச நல்ல பெயரை பிக்பாஸ் வீட்டிற்கு சென்று தவறாக நடந்து கொண்டதால் இழந்துவிட்டோமே என்று இருவரும் சமீபத்தில் சந்தித்தபோது ஒருவரை ஒருவர் புலம்பிக்கொண்டதாக கூறப்படுகிறது



 
 
இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஜூலிக்கு வேலை கிடைத்துள்ளதாம். காம்பியர் செய்ய விரும்பி இண்டர்வியூவுக்கு சென்ற ஜூலி செய்தி வாசிக்க மாட்டேன் என்ற கண்டிஷனுடன் வேலையில் சேர்ந்துள்ளாராம். விரைவில் ஜூலியை அந்த தனியார் டிவியில் பார்க்கலாம்.
 
இந்த நிலையில் அந்த தனியார் தொலைக்காட்சியில் ஜூலிக்கு வேலை கிடைக்க சக்தி ரெகமண்ட் செய்ததாகவும் கூறப்படுகிறது. பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியவர்களை விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் குறிப்பாக ஜூலி, சக்தியை யாரும் தாக்கி விமர்சனம் செய்ய வேண்டாம் என்றும் சமீபத்தில் ஓவியா கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு நன்றி கூற ஓவியாவை இருவரும் நேரில் சந்திக்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிகிறது.