சிவகார்த்திகேயன் படத்தைத் தயாரிக்கும் விஜய்யின் மேனேஜர்!
டான் திரைப்படத்தின் வெற்றியை அடுத்து கவனிக்கப்படும் இயக்குனராகியுள்ள சிபி சக்ரவர்த்தி. சிவகார்த்திகேயனின் எஸ்கே ப்ரொடக்ஷன்ஸும் லைகா நிறுவனமும் இணைந்து ஒரு தயாரித்த டான் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது.
இதையடுத்து அவர் ரஜினிகாந்த் மற்றும் நானி ஆகியோருக்கு கதை சொன்னார். ஆனால் இரண்டு பேருக்குமே அந்த கதை பிடிக்காத சூழலால் அந்த படங்கள் அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை. இந்நிலையில் இப்போது அவர் தன்னுடைய முதல் பட ஹீரோவான சிவகார்த்திகேயனுடன் மீண்டும் இணைய உள்ளதாக சொல்லப்படுகிறது.
சிவகார்த்திகேயன் முருகதாஸ் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் இந்த படம் தொடங்கப்படும் என சொல்லப்படுகிறது. இந்த படத்தை பேஷன் ஸ்டுடியோஸ் நிறுவனமும் விஜய்யின் மேலாளர் ஜெகதீஷும் இணைந்து தயாரிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. விஜய் அரசியலுக்கு சென்றுவிட்டதால் ஜெகதீஷ் இப்போது படத் தயாரிப்பில் அதிக கவனம் செலுத்துவதாக சொல்லப்படுகிறது.