1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: வெள்ளி, 15 செப்டம்பர் 2023 (07:58 IST)

விஜய் 68 படத்தில் நடிக்க பிரசாந்த் தரப்பு போடும் கண்டீஷன்!

நடிகர் விஜய், லியோ படத்துக்குப் பிறகு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன.

இந்த படத்தில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஆச்சர்யத்தையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

90களில் விஜய் அஜித்துக்கு போட்டியாளராக பார்க்கப்பட்டவர் பிரசாந்த். அவரின் படங்கள் மிகப்பெரிய வெற்றிகளை பெற்றன. ஆனால் ஒரு கட்டத்தில் அவரின் படங்கள் தொடர் தோல்வியை சந்திக்க பீல்ட் அவுட் ஆனார். இந்நிலையில் இப்போது தன்னுடைய போட்டியாளராக கருதப்பட்டவரின் படத்தில் நடிக்க பிரசாந்த் தரப்பு ஒரு கண்டீஷன் போட்டுள்ளதாம்.

அதன்படி படத்தில் பிரசாந்த் சம்மந்தமாக எடுக்கும் காட்சிகள் அனைத்தும் படத்தில் இருக்க வேண்டும் என பிரசாந்தின் தந்தை தியாகராஜன் கண்டீஷன் போட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.