திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 14 அக்டோபர் 2023 (07:39 IST)

வெளிநாடுகளில் சென்சார் செய்யப்பட்ட விஜய்யின் லியோ!

விஜய், சஞ்சய் தத், அர்ஜுன், திரிஷா, மிஷ்கின் மற்றும் கௌதம் மேனன் என ஏகப்பட்ட நடிகர்கள் நடித்துள்ள லியோ திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித் குமார் தயாரித்துள்ளார். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவை மேற்கொள்ள அனிருத் இசையமைத்துள்ளார். படம் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகிறது

இந்த படம் தமிழில் ரிலீஸ் ஆகும் அதே நாளில் தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் ஆகிறது. இந்நிலையில் ஆந்திராவில் மிகப்பெரிய அளவில் மார்க்கெட் வைத்துள்ள விஜய்யின் லியோ திரைப்படம் அங்கு நல்ல வசூல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் இந்த படத்தின் சென்சார் நடந்து யூ ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சிங்கப்பூர், மலேசியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளிலும் இந்த படத்துக்கு சென்சார் செய்யப்பட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளதாம். விரைவில் மற்ற நாடுகளிலும் சென்சார் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.