வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 13 அக்டோபர் 2023 (17:54 IST)

'லியோ' பட சிறப்புக் காட்சி: மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தல்

vijays leo
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் விஜய். இவர் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் லியோ. இந்த படத்தில் விஜய்யுடன் இணைந்து,  சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் மேனன், மிஷ்கின் மற்றும் திரிஷா என முன்னணி நடிகர்கள்   நடித்துள்ளனர்.

சமீபத்தில், விஜய்யின் லியோ திரைப்பட டிரைலர்  வெளியாகி இணையதளங்கில் டிரெண்டிங்கிங் ஆனது. இப்படம் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ளது.

ஏற்கனவே இப்படத்தின் முதல் சிங்கில் நா ரெடிதான், 2 வது சிங்கில் படாஸுதான் ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்ற நிலையில், இப்படத்தின் 3 வது சிங்கில்  ‘அன்பெனும்’ என்ற லிரிக் வீடியோ   சமீபத்தில் ரிலீஸானது.

இந்த நிலையில் லியோ வரும் வரும் அக்டோபர் 19 ஆம் தேதி ரிலீஸாகவுள்ள நிலையில், இன்று சென்னையில் உள்ள சில தியேட்டர்களில் லியோ பட டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது.

இந்த நிலையில் லியோ பட சிறப்பு காட்சி குறித்து மாவட்ட ஆட்சியர்களுக்கு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

அதில், நடிகர் விஜய்யின் லியோ படத்திற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்புக் காட்சி திரையிடுவதில், விதிமீறல் நடைபெறாமல் இருப்பதைக் கண்காணிக்க சிறப்பு குழு அமைக்க மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கு முதன்மை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.

சிறப்புக் காட்சிக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியைத் தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.