1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 30 ஜூலை 2021 (16:23 IST)

ரீமேக் படத்தில் நடிக்கும் விஜய் பட நடிகை

ஐயப்பனும் கோஷியும் என்ற மலையாளன் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் செய்யப்படவுள்ளது. இதுகுறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

மலையாளத்தில் வெளியாகி மெகா ஹிட் அடித்த படம் "ஐயப்பனும் கோஷியும்". இந்த படத்தை சச்சி இயக்கியிருந்தார். இதில் பிருத்விராஜ் மற்றும் பிஜு மேனன் இருவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

மலையாள சினிமாவில் இந்த படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து தமிழில் ரீமேக் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வந்த நிலையில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு இப்படத்தின் இயக்குனர் சச்சி உயிரிழந்தார். இது  மலையாள சினிமாவில் பெரும் இழப்பாகப் பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மறைந்த இயக்குநர் சச்சு இயக்கத்தில் வெற்றி பெற்ற ஐயப்பனும் கோசியும் படம் தற்போது தமிழில் ரிமேக் செய்வதற்கான வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இப்படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் விஜய்யுன் மெர்ஷல் படத்தில் நடித்த நித்யா மேனன் நடிக்கவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. மேலும், இப்படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் பெயர் விரைவில் வெளியிடப்படும் எனத் தெரிகிறது.