1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : சனி, 16 டிசம்பர் 2023 (21:44 IST)

ஆசிய டாப் 50 பிரபலங்களின் பட்டியலில் விஜய்

LEo Vijay
லண்டன் ஈஸ்டர்ன் ஐ பத்திரிக்கை ஆசிய டாப் 50 பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
லண்டனில் இருந்து வெளியாகும் பிரபல  வார இதழ் ஈஸ்டர்ன் ஐ -. இந்த இதழில் 2023 ஆம் ஆண்டின் டாப் 50 பட்டியலை வெளியிட்டுள்ளது.
 
இதில், பாலிவுட் சூப்பர் ஸ்டார்  ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார். ஆலியாபட் 2 வது இடத்திலும்,பிரியங்கா சோப்ரா 3வது  இடத்திலும், தில்ஜித் தோசஞ்ச் 4 வது இடமும், பாடகி சார்லி xcx 5 வது இடமும் , ரன்வீர் கபூர் 6 வது இடமும், பாடகி    ஸ்ரேயா கோஷல் 7 வது  இடமும் . நடிகர் விஜய் 8 வது இடமும், பாக்., நடிகர் வஹாஜ் 9 வது இடமும், அமிதாப் பச்சன் 50  வது இடத்திலும் உள்ளனர்.