புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 1 பிப்ரவரி 2018 (06:30 IST)

மதுரை வீரன் படத்தில் விஜய் வந்தது எப்படி?

விஜயகாந்த் மகன் சண்முகப்பாண்டியன் நடித்த 'மதுர வீரன்' திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் பத்திரிகையாளர் காட்சி நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த காட்சியை பார்த்த பலர் இளையதளபதி விஜய் இந்த படத்தில் ஒரு காட்சியில் தோன்றுவதாக டுவீட் பதிவு செய்துள்ளனர்.

மதுரவீரன்' திரைப்படம் முழுக்க முழுக்க ஜல்லிக்கட்டு குறித்த படம் என்பது தெரிந்ததே. இந்த  நிலையில் ஜல்லிக்கட்டு போராட்டம் இளைஞர்கள் மற்றும் மாணவர்களால் நடந்து கொண்டிருந்தபோது, இளையதளபதி விஜய் பேசிய பேச்சின் வீடியோ, இந்த படத்தின் சரியான ஒரு காட்சியில் இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த செய்தி விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் சந்தோஷத்தை தரும் செய்தி தான் என்பதில் சந்தேகம் இல்லை

இந்த படம் சண்முகப்பாண்டியனை ஒரு ஹீரோவாக அங்கீகரிக்க வைத்துள்ள படம் என்றும், அவருடைய நடிப்பில் இருந்து அவர் நிச்சயம் கோலிவுட்டில் மிகப்பெரிய நடிகராக வருவார் என்றும் படம் பார்த்தவர்கள் புகழ்ந்து வருகின்றனர். இந்த புகழ்ச்சி சரிதானா? என்பது நாளை படம் வெளியானவுடன் தெரிந்துவிடும்