ஜார்ஜியாவை அடுத்து ரஷ்யா செல்லும் ‘பீஸ்ட்’ படக்குழு!

beast
ஜார்ஜியாவை அடுத்து ரஷ்யா செல்லும் ‘பீஸ்ட்’ படக்குழு!
Mahendran| Last Modified வெள்ளி, 30 ஜூலை 2021 (21:52 IST)
தளபதி விஜய் நடித்த ‘பீஸ்ட்’ படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்றது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது
இந்த படத்தின் படப்பிடிப்பு இன்றுடன் முடிவடைந்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் வரும் திங்கள் முதல் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்க உள்ளதாகவும் இந்த படப்பிடிப்பில் விஜய் பூஜா ஹெக்டே உள்பட பலர் கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறப்படுகிறது

இதனை அடுத்து வரும் செப்டம்பர் மாதம் ‘பீஸ்ட்’ படக்குழுவினர் ரஷ்யா செல்ல உள்ளதாகவும் அங்கு 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது அதில் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட திட்டமிட்டுள்ளதாகவும், இந்த காட்சிகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது

‘பீஸ்ட்’ படத்தின் ரஷிய படப்பிடிப்பில் பூஜா மற்றும் அபர்ணாதாஸ் ஆகிய இருவரும் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அனிருத் இசையில் உருவாகி வரும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறது என்பதும் இந்த படம் வரும் பொங்கல் தினத்தில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
இதில் மேலும் படிக்கவும் :