1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: திங்கள், 18 ஏப்ரல் 2022 (18:00 IST)

ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது விஜய்யின் ‘பீஸ்ட்’: என்ன தேதி தெரியுமா?

vijay
நடிகர் விஜய் நடித்த ‘பீஸ்ட்’ திரைப்படம் கடந்த 4 நாட்களாக நல்ல வசூல் செய்தது என்பதும் ரூபாய் 200 கோடி என்ற மைல்கல்லை தொட்டு விட்டது என்பது குறிப்பிடத்தக்கது 
 
ஆனால் இன்றே பல தியேட்டர்கள் காற்று வாங்கி உள்ளதால் விரைவில் இந்த படம் ஓடிடியில் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
 
சன் நெக்ஸ்ட் மட்டும் நெட்பிளிக்ஸ் ஆகிய இரண்டு ஓடிடி பிளாட்பாரங்களில் ‘பீஸ்ட்’ திரைப்படம் வரும் மே 11ஆம் தேதி வெளியாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
இது குறித்த முறையான அறிவிப்பை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது 
 
திரையரங்குகளில் பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காவிட்டாலும், ஓடிடியில் நல்ல வரவேற்பை ‘பீஸ்ட்’ பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது