நான்கு நாட்களில் பீஸ்ட்டின் உலக லெவல் வசூல் இதுதான்..! – ரசிகர்கள் ஷாக்!
விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வெளியான நாள் முதல் நேற்று வரையிலான வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்து நெல்சன் இயக்கிய பீஸ்ட் திரைப்படம் கடந்த 13ம் தேதி வெளியானது. முதல் நாள் திரையரங்குகள் முழுவதும் ஹவுஸ் புல்லான நிலையில் அடுத்தடுத்த நாட்களில் கூட்டம் குறையத் தொடங்கியுள்ளது. படத்திற்கு கிடைத்த கலவையான விமர்சனங்கள் படத்தின் வசூலில் இறக்கத்தை உண்டு பண்ணியுள்ளதாக தெரிகிறது.
தற்போது வசூல் நிலவரப்படி, முதல் நாள் உலக அளவில் ரூ.65 கோடி வசூலித்துள்ளது. இரண்டாவது நாள் ரூ.32 கோடியும், 3ம் நாள் 30 கோடியும், நேற்று ரூ.25 கோடியும் என கிட்டத்தட்ட கடந்த நான்கு நாட்களில் ரூ.150 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.