1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 23 ஜூன் 2021 (12:06 IST)

விஜய்க்கு ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர்: இயக்குனர் மிஷ்கின் தகவல்!

விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்கு கிடைத்தால் அவருக்கு ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் கொடுப்பேன் என்று இயக்குனர் மிஷ்கின் தெரிவித்துள்ளார்
 
நேற்று விஜய்யின் பிறந்தநாளை அடுத்தடுத்து டுவிட்டர் ஸ்பேஸில் பேசிய இயக்குனர் மிஷ்கின்  விஜய் படத்தை இயக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தால் கண்டிப்பாக அவருக்கு ஜேம்ஸ்பாண்ட் கேரக்டர் கொடுப்பேன் என்றும் தமிழ் சினிமாவில் அவரை விட்டால் ஜேம்ஸ்பாண்ட் கேரக்டருக்கு பொருத்தமானவர் வேறு யாருமில்லை என்றும் கூறினார் 
 
ஏற்கனவே விஷாலை துப்பரிவாளன் திரைப்படத்தின் வித்தியாசமான கோணத்தில் காட்டிய இயக்குனர் மிஷ்கின், கண்டிப்பாக விஜய் படத்தை இயக்கினால் அவரை ஜேம்ஸ்பாண்ட் பாணியில் காட்டுவார் என்று விஜய் ரசிகர்கள் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் 
 
இந்த நிலையில் மிஷ்கினுக்கு விஜய் ஒரு வாய்ப்புக் கொடுப்பாரா? ஜேம்ஸ்பாண்ட் பாணி படத்தில் விஜய் நடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். ஏற்கனவே இயக்குனர் கௌதம் மேனன் விஜய்யை ஜேம்ஸ்பாண்ட் பாணியில் நடிக்கவைக்க ’யோகன் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படத்தை ஆரம்பித்தார். ஆனால் அந்த திரைப்படம் ஒரு சில காரணங்களால் டிராப் ஆனது என்பது தெரிந்ததே.