1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Siva
Last Updated : வெள்ளி, 1 செப்டம்பர் 2023 (08:02 IST)

அமெரிக்காவின் கிராபிக் ஸ்டுடியோவில் விஜய்.. வெங்கட்பிரபு பகிர்ந்த புகைப்படம்..!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் தளபதி 68 திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்க இருக்கிறார் என்பது சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடிக்கப் போவதாக கூறப்பட்டது 
 
இந்த நிலையில் சமீபத்தில் விஜய், வெங்கட் பிரபு மற்றும் அர்ச்சனா கல்பாதி ஆகிய மூவரும் அமெரிக்கா சென்றனர் என்பதும் விஜய்யை முழுமையாக ஸ்கேன் செய்து ஆவது 3டி மாடலை உருவாக்கி கிராபிக்ஸ் காட்சிகள் உருவாக்கப்பட இருப்பதாகவும் கூறப்பட்டது. 
 
இந்த நிலையில் சற்றுமுன் இயக்குனர் வெங்கட் பிரபு தனது சமூக வலைதள பக்கத்தில் அமெரிக்காவில் உள்ள ஸ்டூடியோவில் விஜய்  3d கிராபிக்ஸ் காட்சிகள் எடுப்பதற்காக ஸ்கேன் செய்வதற்காக உட்கார வைக்கப்பட்டிருந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
 
Edited by Siva