1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (16:13 IST)

கடலூரில் விஜய் ரசிகர்கள் சாலை மறியல்: பொதுமக்கள் ஆத்திரம்!

vijay fans
கடலூரில் விஜய் ரசிகர்கள் சாலை மறியல்: பொதுமக்கள் ஆத்திரம்!
கடலூரில் விஜய் ரசிகர்கள் திடீர் சாலை மறியல் செய்ததால் பொதுமக்கள் ஆத்திரம் அடைந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படம் வரும் 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் முன் பதிவுகளும் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது 
இந்த நிலையில் கடலூரில் உள்ள ஒரு திரையரங்கில் பீஸ்ட்  படத்தின் சிறப்பு காட்சிக்கான டிக்கெட் தரவில்லை என கூறி கடலூர் - புதுச்சேரி சாலையில் விஜய் ரசிகர்கள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர் 
 
இதனால் கடும் அதிருப்தியடைந்த பொதுமக்கள் பீஸ்ட் படத்தின் சிறப்பு காட்சிக்கான டிக்கெட் தரவில்லை என்பதற்காக பொதுமக்களை இம்சைக்கு உள்ளாக்குவதா? என வாக்குவாதம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது