செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 5 ஜனவரி 2021 (19:19 IST)

’மாஸ்டர்’ ரிலீஸ்: போஸ்டருக்கு பதில் விஜய் ரசிகர்கள் செய்த மகத்தான சேவை

’மாஸ்டர்’ ரிலீஸ்: போஸ்டருக்கு பதில் விஜய் ரசிகர்கள் செய்த மகத்தான சேவை
தளபதி விஜய் நடித்த ’மாஸ்டர்’ திரைப்படம் இம்மாதம் 13ஆம் தேதி பொங்கல் விருந்தாக உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து ’மாஸ்டர்’ படத்தின் கொண்டாட்டத்தை ஏற்கனவே ஆரம்பித்துள்ள விஜய் ரசிகர்கள் இந்த படத்தை வெற்றிப் படமாக்க முடிவு செய்துள்ளனர் 
 
இந்த நிலையில் விஜய்யின் ஒவ்வொரு படங்கள் ரிலீசாகும்போது ஆயிரக்கணக்கில் செலவு செய்து நகரம் முழுவதும் போஸ்டர்களை விஜய் ரசிகர்கள் ஒட்டுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதைய கொக்ரோனா வைரஸ் காலத்தில் போஸ்டர்கள் அடிப்பதற்கு பதிலாக அந்த செலவில் தற்போது பொருளாதாரத்தில் பின்தங்கியிருக்கும் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உதவி செய்ய விஜய் ரசிகர்கள் முடிவு செய்துள்ளனர் 
 
அந்த வகையில் பொங்கலுக்கு வெளியாக இருக்கும் ’மாஸ்டர்’ படத்திற்காக பேனர் அடிக்கும் செலவை தவிர்த்து அதற்கு பதிலாக அந்த பணத்தின் மூலம் கொரோனா காலத்தில் இயக்கப்படாமல் கிழிந்த நிலையில் இருந்த ஆட்டோக்களை சீரமைப்பு செய்து காஞ்சிபுரம் மாவட்டம் விஜய் ரசிகர்கள் அசத்தியுள்ளனர். 
 
’மாஸ்டர்’ போஸ்டர்களுடன் அந்த ஆட்டோக்கள் தற்போது சீரமைப்பு செய்யப்பட்டு சூப்பராக காட்சியளிக்கிறது என்பதும் இது குறித்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது