1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 4 ஜனவரி 2021 (15:51 IST)

சாதனைக்கு ரெடியாகும் மாஸ்டர்…ரசிகர்கள் ஹேஸ்டேக் டிரெண்டிங்..

மாஸ்டர் படம் குறித்து  விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

விஜய் ,சேதுபதி, நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். அனிருத் இசையமைத்துள்ளார்.லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார்.

வரும் ஜனவரி 13 ஆம் தேதி இப்படத்தை தியேட்டரில் வெளியிடுவதாகப் படக்குழு தெரிவித்த நிலையில் நடிகர் விஜய் சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, தியேட்டர்களில் 100 சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கவேண்டுமென கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் இன்று தமிழக அரசு திரையரங்கில் 100% பார்வையாளர்களுக்கு அனுமதியளித்து உத்தரவிட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த சினிமா துறையினரும், ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

மேலும், மாஸ்டர் படம் குறித்து  விஜய் ரசிகர்கள் டுவிட்டரில் ஹேஸ்டேக் உருவாக்கி டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

ஏற்கனவே விஜய்யின்  மாஸ்டர் டீசர் 50 மில்லியன் பார்வையாளர்களைப் பெற்று சாதனைப்படைத்துள்ளது. அடுத்து இப்படத்தின் டீசருக்கு ரசிகர்கள் வெயிட் பண்ணி வருகின்றார்கள்.  எனவே மாஸ்டர் படத்திற்கு வசூல் நீதியாகவும், சமூக வலைதளங்கலும் மேலும்  பல சாதனைகளைப் படைக்காலம் என தகவல்கள் வெளியாகிறது.

மேலும், இன்று காலையில் நடிகர் சிம்பு தனது டுவிட்டர் பக்கத்தில், விஜய் அண்ணனின் மாஸ்டர் படத்தை என் ரசிகர்களும் பார்க்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ளதாவது :

தனது ரசிகர்களுக்கு ட்விட்டரில் அறிக்கை வெளியிட்டுள்ள சிம்பு “ஈஸ்வரன் படத்தை இவ்வளவு சீக்கிரமாக முடித்து பல பிரச்சினைகளுக்கு இடையே வெளியிடுவது கொரோனாவால் பாதிக்கப்பட்ட திரையரங்குகள் மீள வேண்டும் என்பதற்காகதான். ஈஸ்வரன் வெளியாகும் அதே நாளில் நீண்ட நாட்களாக காத்திருப்பில் உள்ள விஜய் அண்ணனின் மாஸ்டர் படமும் வெளியாகிறது. அவர்கள் நினைத்திருந்தால் ஆன்லைனில் விற்று இருக்கலாம், ஆனால் திரையரங்குகள் நலன் கருதி திரையரங்கில் வெளியிடுகிறார்கள். எனவே எனது ரசிகர்கள் மாஸ்டர் படத்தை பார்க்க வேண்டும். விஜய் அண்ணா ரசிகர்கள் எனது ஈஸ்வரன் படத்தை பார்க்க வேண்டும். அதுதான் திரையரங்குகளுக்கு செய்யும் உதவியாக இருக்கும்” என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.