செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : ஞாயிறு, 6 ஜனவரி 2019 (14:04 IST)

டிவிட்டரில் டிரெண்டாகும் #திருட்டுபயசீமான்!

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீபத்தில் நடந்த அரசியல் நிகழ்ச்சி ஒன்றில் நடிகர் விஜய்யை கடுமையாக விமர்சனம் செய்துப் பேசியது சர்ச்சைகளை கிளப்பியுள்ளது. இதனால் விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். 
 
அதாவது சர்கார் விவகாரத்தின் போது விஜய் முதல்வரிடம் தாழ்ந்ந்து சென்றது சரியானது அல்ல. சர்கார் படத்தில் அரசியல் வசனங்கள் பேசினால், ஆமாம் நான் பேசினேன் என தைரியமாக சொல்லவேண்டும். அதை விட்டுவிட்டு முதல்வரை சந்திக்க நேரம் கேட்பது, ஜெயலலிதா மீது மரியாதை வைத்திருந்தேன் என கூறுவது எல்லாம் அவமானம். 
 
எடப்பாடிக்கு எல்லாமா பயப்படுவது… அவரே மோடியின் அடிமை… பதவி போனதும் அவரைப் பக்கத்து வீட்டுக்காரன் கூட மதிக்கமாட்டான்… உன் மேல் நிறைய மரியாதை வைத்திருந்தேன்.. நீயெல்லாம் என் தம்பியா?… இதில் ஒரு விரல் புரட்சியாம்.. என் படத்தில் நடிக்கமாட்டாரம்… ஆனால் நான் பேசும் வசனங்களை எல்லாம் தன் படத்தில் பேசுவாராம்…. என விஜய்யை விமர்சித்திருந்தார். 
 
இதனால் ஆத்திடமடைந்த விஜய் ரஜிகர்கள் #திருட்டுபயசீமான் என்ற ஹேஸ்டேக்கை உருவாக்கி டிரெண்டாக்கி வருகின்றனர். இந்த ஹேஸ்டேட் தற்போது டிவிட்டரில் டாப் டிரெண்டிங்கில் உள்ளது. இன்று ஏ.ஆர்.ரகுமானின் பிறந்தநாள் அவருக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஆனால், இதையெல்லாம் பின்னுக்கு தள்ளி #திருட்டுபயசீமான் டிரெண்டாகி வருகிறது.