வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வெள்ளி, 4 ஜனவரி 2019 (16:31 IST)

ரஜினியின் மார்க்கெட் சரிந்ததா? அஜித்துடனான போட்டி ஏன்?

தமிழ் சினிமாவில் எம்.ஜி.ஆர் - சிவாஜி, ரஜினி - கமல், விஜய் - அஜித் என அடுத்தடுத்த ஜெனரேஷன்கள் இருந்து வந்த நிலையில் தற்போது ரஜினி சம்மந்தமே இல்லாமல் அஜித்துடன் போட்டி போட்டு வருகிறார். 
 
பொங்கல் ரேசில் கலக்கப்போவது பேட்டயா? விஸ்வாசமா? என தேவையற்ற போட்டி நிலவி வருகிறது. பேட்ட படமும் விஸ்வாசம் படமும் பொங்கலை முன்னிட்டு வரும் 10 ஆம் தேதி ஒரே நாளில் ரிலீசாக உள்ளது. 
 
பேட்ட படத்தின் டிரெய்லரில் அடிச்சு அண்டர்வேரோட ஓட விட்ருவேன்.. மானம் போச்சுன்னா… திரும்ப வராது.. பாத்துக்கோ மற்றும் எவனுக்காவது பொண்டாட்டி புள்ள செண்ட்டிமெண்ட் இருந்தா… ஓடிப்போயிடு.. கொல காண்டுல இருக்கேன்… கொல்லாம விடமாட்டேன் எனும் வசனங்கள் விஸ்வாசம் படத்தையும் அஜித்தையும் தாக்குவதாக தோன்றியது. 
இதனையடுத்து வெளியான விஸ்வாசம் டிரெய்லரில் அஜித், உங்க மேல கொல கோவம் வரணும்… ஆனா உங்கள எனக்குப் புடிச்சுருக்கு… ஊரு தேனி மாவட்டம்… பொண்டாட்டி பேரு நிர்ஞ்சனா… பொன்னு பேரு ஸ்வேதா… முடிஞ்சா ஒத்தைக்கு ஒத்த வாடா என பேட்ட ரஜினிக்கு பதில் அளித்தது போல் இருந்தது. 
 
இதெல்லாம் ரஜினிக்கு தேவையா? அவரது மாஸ் என்ன கிளாஸ் என்ன ஆனால் இப்போது இப்படி போட்டி போட்டு வருகிறார். அதேபோல் பாக்ஸ் ஆபிஸ் கலெக்சன்களிலும் ரஜினியின் படத்தை பின்னுக்கு தள்ளு முன்னேறிவிட்டார் விஜய். கடந்த சில ஆண்டுகளாக விஜய்யின் படங்களே கலெக்‌ஷனில் முதல் இடத்தில் உள்ளது. 
ரஜினிக்கு போட்டியாக கமல் பார்க்கப்பட்ட காலம் போய் இப்போது அஜித் ரஜினிக்கு போட்டியாகியுள்ளார். இதன் மூலம் ரஜினிக்கு ரசிகர்கள் இருந்தாலும் அவரது மார்க்கெட் குறைந்துவிட்டதா என்ற கேள்வி கேட்டக்கத்தான் தோன்றுகிறது. 
 
ஏனெனில் தமிழ் சினிமாவில் ஒரே ஒரு சூப்பர் ஸ்டார் ரஜினிதான். ஆனால் இப்போது அவர் தனக்கு அடுத்த படியில் உள்ள அஜித்துடன் மோதுகிறார். இது ரஜினியின் சரிவா? இல்லை அஜித்தின் வளர்ச்சியா?