செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 1 மே 2019 (09:30 IST)

’தன்னைத் தானே செதுக்கியவன்’ – அஜித் பிறந்தநாள் பதிவு ! - பாகம் 2

தமிழ் சினிமாவின் முக்கிய நாயகர்களுள் ஒருவரும் ரசிகர்களால் தல என செல்லமாக அழைக்கப்படுவருமான நடிகர் அஜித்தின் பிறந்தநாள் இன்று ரசிக்ர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனால் பழையபடி மீண்டும் ரேஸ்களில் ஈடுபடுவதில் பிரச்சனைகள் எழுந்தன. தமிழ் சினிமாவிலும் தவிர்க்க முடியாத கதாநாயகனாக உருவாக ஆரம்பித்து அவருக்கென்று ரசிகர்கள் வட்டம் உருவாக ஆரம்பித்து வருகிறது. என்ன செய்வதேன யோசித்த தனது கனவான பைக் ரேஸிங்கை சில மாதங்களுக்கு ஒத்திவைக்கிறார். தொடர்ந்து படங்களில் நடிக்கிறாட். சில படங்கள் வெற்றி… சில படங்கள் தோல்வி… ஆனால் ரசிகர்களின் எண்ணிக்கைக் கூடிக்கொண்டே போகிறது.

தமிழ் சினிமாவின் சாக்லேட் பாய் என சொல்லப்பட்ட அஜித் தனது அடுத்த அவதாரத்தை நோக்கி செல்கிறார். தீனா, வில்லன் போன்ற ஆக்‌ஷன் படங்களில் நடித்து மாஸ் ஹீரோவாகிறார். முதலில் கிடைத்த பெரும் வெற்றி போகப்போக கிடைக்கவில்லை தொடர்ந்து மூன்று ஆண்டுகள் பெரிய வெற்றிகள் எதுவும் இல்லாமல் தோல்விப் படங்களாகவே கொடுக்கிறார். தனது சக நடிகர்கள் எல்லோரும் ஹிட் படங்களாக கொடுத்து மேலே மேலே போகின்றனர். போட்டி நடிகர்களின் ரசிகர்கள் அஜித் ரசிகர்களைக் கேலி செய்ய ஆரம்பிக்கின்றனர்.

ஆனாலும் அஜித்தும் அவர் ரசிகர்களும் அவர் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். ஒரே ஒரு வெற்றிக்காக காத்திருக்கின்றனர். தொடர் தோல்வி படங்களுக்குப் பிறகு அஜித்தின் வரலாறு படம் வெளியாகிறது. மூன்று கதாபாத்திரங்களில் அஜித் நடிப்பில் பிரமாதப்படுத்த அஜித் ரசிகர்கள் கொண்டாடி தீர்க்கின்றனர்.

அதன் பின்னர் பில்லா, மங்காத்தா, ஆரம்பம் என இளைஞர்களைக் குறிவைத்து அஜித்தின் படங்கள் வெளியாக பெண்கள் மற்றும் குடும்ப ரசிகர்கள் வருவது குறைகிறது. அந்த குறையைப் போக்க அஜித் சிறுத்தை சிவாவோடுக் கைகோர்க்கிறார். வீரம், வேதாளம் மற்றும் விஸ்வாசம் என பிளாக்பஸ்டர் ஹிட்களைக் கொடுக்கிறது இந்த காம்போ. அதிலும் கடைசியாக ரிலிஸான விஸ்வாசம் தமிழ்நாடு ஆல்டைம் பிளாக்பஸ்டர்களில் ஒன்றாக கிரிடம் சூடியுள்ளது.

எல்லாம் ஒருபுறமிருக்க அஜித்தின் சினிமா வாழ்க்கையை ஒருநிமிடம் திரும்பிப் பார்த்தோமானால் வெற்றியை விட தோல்விகளே அதிகம்….  விருதுகளை விட அவமானங்களே அதிகம்… ஆனால் அஜித் என்றும் தோல்விகளால் துவண்டதில்லை. விழும்போதெல்லாம் எழுவார்… எழுந்து வேகமாக ஓடுவார்… அவரின் ஒவ்வொரு சிறு முன்னேற்றத்தையும் அவரது ரசிகர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர்.