வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : புதன், 26 டிசம்பர் 2018 (19:01 IST)

ஒரு லட்சம் முறை 'தளபதி' என கூறிய வெறித்தனமான ரசிகர்: வைரலாகும் வீடியோ

கோலிவுட் திரையுலகின் உச்ச நட்சத்திரங்களான அஜித் மற்றும் விஜய்க்கு வெறித்தனமான ரசிகர்கள் உண்டு என்பதும் இருதரப்பினர்களுக்கும் இடையே சமூக வலைத்தளங்களில் பிரச்சனை வராத நாளே இல்லை என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் தளபதி விஜய் ரசிகர் ஒருவர் 'தளபதி' என்ற சொல்லை ஒரு லட்சம் முறை கூறி அதனை வீடியோவாக பதிவு செய்து யூடியூபில் வெளியிட்டுள்ளார். சுமார் 11 மணி நேரம் அவர் விடாமல் 'தளபதி' என கூறியுள்ளார். ஒருபக்கம் அவர் விஜய் மீது வைத்துள்ள வெறித்தனமான அன்பை பாராட்டி வரும் விஜய் ரசிகர்கள், இன்னொரு பக்கம் இது தேவையில்லாதது என்றும் கூறி வருகின்றனர்,.

இந்த வீடியோவை இதுவரை சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்து சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.