1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 14 ஆகஸ்ட் 2020 (13:54 IST)

தலைவன் படம் பார்க்கலாமே போறேன்... ட்விட் செய்துவிட்டு ரசிகர் தற்கொலை!

இந்த கொரோனா ஊரடங்கு ஆரம்பித்ததில் இருந்தே பிரபலங்கள் , நண்பர்கள் என நமக்கு நெருங்கியமனவர்கள் பலர் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொள்கின்றனர். உயிரை மாய்த்துகொள்வது ஒரு முடிவல்ல என்று நம்மில் பலரும் அறிவுரை கூறினாலும் அதை கேட்கும் நிலையில் அவர்கள் இலை. 
 
வேலை இழப்பு, இயல்பு வாழ்க்கை பாதிப்பு, தனிமை என தற்கொலைக்கு முக்கிய காரணிகளாக பார்க்கப்படுகிறது. அதில் முக்கியமாக இந்தியா முழுக்க உள்ள மக்களை பெரிதும் பாதித்தது பாலிவுட் இளம் நடிகர் சுஷாந்தின் மரணம். இந்நிலையில் தற்ப்போது பாலா(21) என்ற விஜய்யின் ரசிகர் ஒருவர் விஜய்க்கு ட்விட் செய்துவிட்டு மன அழுத்தத்தால் நேற்று தற்கொலை செய்துகொண்டுள்ளார். 
 
அந்த பதிவில், “தலைவன் படம் பார்க்காமலே போறேன். தலைவனையும்.. லவ் யூ தலைவா” என்று பதிவிட்டு விஜய்க்கு டேக் செய்துள்ளார். இந்த விஷத்தை அறிந்த மற்ற விஜய் ரசிகர்கள் பெருந்துயரத்தில் அவருக்கு அஞ்சலி கூறி வருகின்றனர். அத்துடன் திரைப்பிரபலங்களான நடிகர் சஞ்சீவ்,  ஷாந்தனு, நடிகை சனம் ஷெட்டி உள்ளிட்டோர் #RIPBala என்ற ஹேஷ் டேக்கில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.