1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: வெள்ளி, 17 ஆகஸ்ட் 2018 (11:05 IST)

இளையராஜாவின் இசையில் 'மேற்கு தொடர்ச்சி மலை பேசுகிறது'- அதிரடி டிரெய்லர்

`மேற்குத் தொடர்ச்சி மலை' படத்தின்  டிரெய்லர் வெளியாகியுள்ளது.

 
மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் வாழ்கின்ற எளிய மக்களின் கதையை படமாக தயாரித்துள்ளார் நடிகர் விஜய் சேதுபதி .`வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல' படங்களில் இணை இயக்குநராகப் பணிபுரிந்த லெனின் பாரதி இப்படத்தை இயக்கியுள்ளார்,
 
இந்நிலையில், படத்தின் டிரெய்லர் நேற்று வெளியாகியது. வசனங்களே, இல்லாமல் வெறும் காட்சிகள் மட்டுமே இந்த டிரெய்லரில் உள்ளது.  

 
தனது சொந்த மண்ணின் கதை களம் என்பதால், இசைஞானி இளையராஜா கேட்பவர்களை உருவ வைக்கும் அளவுக்கு அற்புதமாக இசையமைத்துள்ளார். அவரது இசையில் மேற்கு தொடர்ச்சி மலை மெல்லிய புன்னகையுடன் பேசுகிறதோ என்ற சந்தேகம் தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு மூலம் தெரிகிறது. அவர் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை மிக அற்புதமாக கண்முன்னே காட்டியுள்ளார். இந்த ட்ரெய்லர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.