செவ்வாய், 14 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 14 செப்டம்பர் 2020 (11:05 IST)

தயாரிப்பாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்த விஜய் தேவாரகொண்டா? பின்னணி என்ன?

தெலுங்கு நடிகர் விஜய் தேவாரகொண்டா நடிக்கும் படம் என்று சொல்லி நடிகர்கள் தேர்வு நடத்துபவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நடிகர் விஜய் தேவாரகொண்டா குறுகிய காலத்தில் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி ஆடியன்ஸ்களுக்கு தெரிந்த முகமாக மாறியுள்ளார். எல்லாம் அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி மற்றும் கீத கோவிந்தம் ஆகிய படங்களின் வெற்றியால் வந்ததுதான். கடைசியாக அவர் நடித்த வேல்ட் பேமஸ் லவ்வர் எனும் திரைப்படம் அட்டர் பிளாப்பான நிலையில் பூரி ஜகன்னாத் இயக்கத்தில் இந்தி மற்றும் தெலுங்கில் உருவாகும் படத்தில் நடித்து வருகிறார்.

அதைத் தவிர வேறு படங்கள் எதிலும் அவர் ஒப்பந்தம் செய்யவில்லை என சொல்லப்படுகிறது. இந்நிலையில் சிலபேர் விஜய் தேவார்கொண்டா நடிக்கும் புதிய படம் என சொல்லி நடிகர்கள் தேர்வு நடத்துவதாக செய்திகள் வெளியாகின. இதை மறுத்துள்ள விஜய் அதுபோல மோசடி செய்பவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும் தன் படங்கள் சம்மந்தப்பட்ட அறிவிப்பை தானோ அல்லது தன் தயாரிப்பாளர்களோ அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம் எனக் கூறியுள்ளார்.