கன்னடத்தில் இருந்து அடுத்து ரீமேக் ஆகும் படம்… இயக்குனர் இவரா?
கன்னட சினிமாவில் இப்போது அதிகளவில் படங்கள் தமிழில் ரீமேக் ஆகி வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டு தொடக்கத்தில் கன்னடத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் தியா. தியா என்ற பெண்ணின் வாழ்க்கையில் குறுக்கிடும் இரு இளைஞர்கள் மற்றும் அவர்களால் தியா வாழ்க்கையில் ஏற்படும் மாற்றம் இதுவே அந்த படத்தின் கதை. ஓடிடி பிளாட்பார்ம்களில் வெளியாகி மிகப்பெரிய கவனத்தை ஈர்த்த இந்த திரைப்படம் இப்போது தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.
இந்த படத்தை தற்போது ரஞ்சித் தயாரிப்பில் குதிரை வால் படத்தை இயக்கியுள்ள மனோஜ் லியோனல் ஜாசன் இயக்க உள்ளாராம். இந்த படத்தில் நடிக்க இருக்கும் நாயகி மற்றும் மற்ற கதாபாத்திர தேர்வுகள் விரைவில் நடக்கும் என தெரிகிற்து.