கவனம் ஈர்க்கும் விஜய் தேவரகொண்டாவின் ‘பேமிலி ஸ்டார்’ ஃபர்ஸ்ட் லுக்!
தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. லைகர் படத்துக்குப் பின்னர் விஜய் தேவரகொண்டாவின் அடுத்த படமாக குஷி திரைப்படம் செப்டம்பர் 1 ஆம் தேதி ரிலீஸாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தமிழ்நாட்டில் இந்த படம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்றாலும், தெலுங்கில் நல்ல வசூலைப் பெற்றது.
இந்நிலையில் இப்போது விஜய் தேவரகொண்டா இப்பொது பேமிலி ஸ்டார் என்ற படத்தில் நடித்து வருகிறார். பரசுராம் இயக்கும் இந்த படத்தில் மிருணாள் தாக்குர், திவ்யன்ஷா கவுசிக், அஜய் கோஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்துக்கு கோபி சுந்தர் இசையமைக்கிறார். படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார்.
இந்த படம் ஏப்ரல் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் நிலையில் இந்த படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்று வருகிறது.