திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: புதன், 10 ஏப்ரல் 2024 (10:17 IST)

பேமிலி ஸ்டார் படத்தின் மூலம் இவ்வளவு கோடி நஷ்டம் வருமா? அதிர்ச்சியில் தில் ராஜு!

தெலுங்கு சினிமாவின் இளம் சூப்பர் ஸ்டார் நடிகராக உருவாகி வருகிறார் விஜய் தேவரகொண்டா. அவர் நடித்த அர்ஜுன் ரெட்டி உள்ளிட்ட படங்கள் மிகப்பெரிய வெற்றியை ஈட்ட, பேன் இந்தியா படமான லைகரில் நடிக்த்தார். ஆனால் அந்த படம் மிகப்பெரிய தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் அவர் நடித்த குஷி திரைப்படம் தோல்விப் படமாக அமைந்தது.

இதையடுத்து கடந்த வாரம் விஜய் தேவரகொண்டா மற்றும் மிருனாள் தாக்கூர் நடிப்பில் பரசுராம் இயக்கத்தில் நடித்த  ‘பேமிலி ஸ்டார்’ என்ற திரைப்படம் ஏப்ரல் 5 ஆம் தேதி ரிலீஸ் ஆனது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான இந்த திரைப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யவில்லை. படம் கிரிஞ்சாக இருப்பதாக ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் கழுவி ஊற்றினர்.

இதனால் படத்தின் வசூல் மிகவும் மோசமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழ் நாட்டில் இந்த படம் சுத்தமாக எந்த அதிர்வையும் ஏற்படுத்தவில்லை. இந்நிலையில் 90 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் 30 கோடி ரூபாய் அளவுக்குக் கூட வசூலிக்காது என சொல்லப்படுகிறது. இதன் மூலம் தயார்ப்பாளருக்கு பெருத்த நஷ்டம் ஏற்படும் என சொல்லப்படுகிறது.

இதற்கிடையில் சமூகவலைதளத்தில் நெகட்டிவ் விமர்சனங்களைக் கொடுத்தவர்கள் மீது படக்குழுவினர் புகார் அளித்துள்ளது மேலும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.