செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 12 டிசம்பர் 2018 (11:40 IST)

சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருது பெற்ற விஜய்!

மெர்சல் படத்தில் நடித்ததுக்காக சிறந்த நடிகருக்கான சர்வதேச விருதினை நடிகர் விஜய் பெற்றார்.


 
அட்லி இயக்கத்தில் விஜய், நித்யா மேனன், சமந்தா நடித்த படம் மெர்சல்.   மருத்துவத்துறையில் நடக்கும் ஊழலை  உலக்கு காட்டும் வகையில் மெர்சல் படம் எடுக்கப்பட்டிருந்தது.
 
ஆளப்போறான் தமிழன் பாடல்  உலகம் முழுவதும் உள்ள ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது.  மேலும் மெர்சல் படத்தில், மோடி அரசின் பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் படும் அவஸ்தையையும் நேரடியாக விமர்சிக்கப்பட்டு இருந்தது-


 
இந்த காட்சிகளுக்காக  பாஜக எதிர்ப்பு தெரிவித்தால், படத்துக்கு பெரும் விளம்பரம் கிடைத்தது. இதனால் மெர்சல் தாறுமாறாக ஓடியது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் மெர்சல் படத்தில் நடித்ததுக்காக நடிகர் விஜய்க்கு  சர்வதேச அளவில் சிறந்த நடிகருக்கான விருதினை ஐரா அவார்ட்ஸ் அளித்துள்ளது.