1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 24 ஜனவரி 2022 (09:59 IST)

கடந்த 10 ஆண்டுகளில் கேட்ட சிறந்த கதை… தில் ராஜுவைப் பாராட்டிய விஜய்!

விஜய் நடிப்பில் வம்சி இயக்கும் படத்தில் விஜய் நடிக்க உள்ள நிலையில் அந்த படத்தை தில் ராஜு தயாரிக்கிறார்.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில வாரங்களாக வெளிவந்து கொண்டிருந்தன என்பதும் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக இருப்பதாக கூறப்பட்டது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியானது.

இப்போது படத்தின் திரைக்கதை அமைக்கும் பணிகள் நடந்துவருகின்றன. இந்நிலையில் இந்த படத்தின் கதைக்களம் பற்றிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது. படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சமீபத்தில் இந்த படத்தைப் பற்றி பேசியுள்ளார். அதில் ‘இந்த படத்தின் கதையை சொன்னபோது கடந்த 10 வருடங்களில் நான் கேட்ட மிகச்சிறந்த கதை என்று விஜய் பாராட்டினார். அனைவருக்கும் பிடிக்கும் படமாக இருக்கும். மார்ச் மாதத்தில் படப்பிடிப்பு தொடங்கி தீபாவளி அல்லது பொங்கலுக்கு வெளியாகும்’ எனக் கூறியுள்ளார்.