1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 23 டிசம்பர் 2021 (16:28 IST)

விஜய் 66 படத்தில் இவர்தான் கதாநாயகி… லேட்டஸ்ட் தகவல்!

நடிகை ராஷ்மிகா மந்தனாதான் விஜய் 66 படத்தில் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 66வது திரைப்படம் குறித்த தகவல்கள் கடந்த சில மாதங்களாக் வெளிவந்து கொண்டிருக்கின்றன. பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிப்பில் பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் அவரது படம் உருவாக உள்ள இந்த படத்துக்கு தமன் இசையமைக்க உள்ளார் என்பது மட்டுமே இப்போது வரை அதிகாரப்பூர்வமாகியுள்ளது.

இந்நிலையில் படத்தின் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் நடிப்பார் என சொல்லப்பட்டு வந்த நிலையில் அதை அவர் மறுத்தார் என்பது குறிப்பிடத்த்ககது.