1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sugapriya Prakash
Last Modified: வெள்ளி, 26 மே 2017 (11:14 IST)

நடிகர் விஜய் - முருகதாஸ் மோதல்?

நடிகர் விஜய்க்கு துப்பாக்கி, கத்தி என இரண்டு சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் முருகதாஸ். அடுத்து விஜய்யை வைத்து ஒரு படத்தை இயக்கவும் முடிவு செய்துள்ளார்.


 
 
தற்போது முருகதாஸ் தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு நடிப்பில் ஒரு படத்தை இயக்கி வருகிறார். ஸ்பைடர் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் ஜூலை மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டது.
 
ஆனால் சில காரணங்களால் ரிலீஸ் தேதி தள்ளிப்போய் உள்ளது. மேலும், அக்டோபர் மாதம் தீபாவளி விடுமுறைக்கு வெளியாகும் என தற்போது டோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது. 
 
அதே நாளில் தான் விஜய் தற்போது நடித்து வரும் விஜய் 61 படமும் வெளியாகவுள்ளது. எனவே, ஒரே நாளில் இரு படமும் ரிலீஸ் ஆனால் இரு படங்களுக்கும் வசூலில் பதிப்பு இருக்கும் என தெரிகிறது.