1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 12 நவம்பர் 2021 (18:52 IST)

விஜய்யின் அடுத்த படத்தை தயாரிப்பது தாணுவா? இல்லைவே இல்லை என்கிறது கோலிவுட் வட்டாரம்!

தளபதி விஜய் தற்போது பீஸ்ட் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் அவருடைய அடுத்த படத்தை தில் ராஜூ தயாரிக்கிறார் என்பதும், வம்சி இயக்குகிறார் என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் தளபதி விஜய்யின் 67 வது படத்தை கலைப்புலி எஸ் தாணு அவர்கள் தயாரிக்க இருப்பதாகவும் லோகேஷ் கனகராஜ் இயற்கை இருப்பதாகவும் கூறப்படுகிறது ஆனால் இந்த தகவல்களில் எந்தவித உண்மையும் இல்லை என்றும் கலைப்புலி தாணு மற்றும் விஜய் இணைவது இப்போதைக்கு சாத்தியமில்லை என்று கோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன 
 
அதே போல் கமல்ஹாசனின் ‘விக்ரம்’ படத்தை இயக்கி வரும் லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக விக்ரம் நடிக்கும் படத்தை இயக்க இருப்பதாகவும் அதற்கான பணிகள் விரைவில் தொடங்க உள்ளதாகவும் எனவே விஜய் - லோகேஷ் கனகராஜ் மீண்டும் இப்போதைக்கு இணைய வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது