1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 11 செப்டம்பர் 2023 (14:14 IST)

தளபதி 68 படத்தின் பூஜை & ஷூட்டிங் தொடங்குவது எப்போது? லேட்டஸ்ட் தகவல்!

பிகில் படத்துக்குப் பிறகு விஜய், ஏஜிஎஸ் நிறுவனத்துக்காக ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை  வெங்கட் பிரபு இயக்க  உள்ளார். இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில மாதங்களுக்கு முன்னர் வெளியான நிலையில் இசையமைப்பாளராக யுவன் ஷங்கர் ராஜா ஒப்பந்தமாகியுள்ளார். படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்துக்கான திரைக்கதை அமைக்கும் வேலைகள் இப்போது நடந்து வருகின்றன. படத்தைப் பற்றிய தகவல்கள் எதுவும் வெளியாகாமல் ரகசியமாக வைத்துள்ளனர்.

இந்த படத்தின் முன் தயாரிப்புப் பணிகள் தற்போது நடந்து வரும் நிலையில் அக்டோபர் 1 ஆம் தேதி இந்த படத்தின் பூஜை நடக்கும் எனவும் 2 ஆம் தேதி முத படத்தின் ஷூட்டிங் தொடங்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.

சமீபத்தில் இந்த படத்துக்காக விஜய்யின் உருவத்தை 3டி யில் ஸ்கேன் செய்ய அமெரிக்காவில் உள்ள ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றது படக்குழு. அது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்றன. படத்தில் சினேகா, பிரியங்கா மோகன் ஆகிய இருவரும் கதாநாயகிகளாக நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. முக்கிய வேடங்களில் பிரசாந்த் மற்றும் பிரபுதேவா ஆகிய இருவரும் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.