செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 5 அக்டோபர் 2020 (17:12 IST)

அஜித்துக்கு எழுதிய கதையா அது! விஜய்க்கு சொல்லி ஓகே பண்ணிய முருகதாஸ்!

விஜய் நடிக்க இருக்கும் முருகதாஸ் இயக்கும் படத்தின் கதை அஜித்துக்காக எழுதப்பட்டது என செய்திகள் வெளியாகியுள்ளன.

தளபதி விஜய் நடிப்பில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்க இருக்கும் திரைப்படத்தை பிரபல இயக்குநர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் இயக்க உள்ளார் . இந்த படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பில் விநாயகர் சதுர்த்தி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் சில காரணங்களால் இன்னும் அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் விரைவில் அதிகாரப் பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போது இந்த படம் பொங்கலுக்குப் பின்னர்தான் ஆரம்பிக்கப் பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இந்த படத்தை பற்றிய செய்தி ஒன்று இப்போது வெளியாகியுள்ளது. அது என்னவென்றால் இப்போது விஜய் நடிக்கவுள்ள கதை பல ஆண்டுகளுக்கு முன்னால் முருகதாஸ் அஜித்துக்காக எழுதிய கதையாம். அதில் சில மாற்றங்களை செய்து முருகதாஸ் இப்போது விஜய்க்கு சொல்லி ஓகே வாங்கியுள்ளாராம். நீண்ட நாட்களாக அந்த கதையை அஜித்தை வைத்துதான் இயக்குவேன் எனக் காத்திருந்த முருகதாஸ் இப்போது தன் காத்திருப்பைக் கைவிட்டுள்ளாராம்.