விஜய் 62 படத்துக்காக ஒரு பாடலை இசையமைத்த ஏ.ஆர்.ரஹ்மான்
விஜய் 62 படத்துக்காக, ஒரு பாடலை ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து முடித்துவிட்டதாகத் தகவல் கிடைத்துள்ளது.
‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படம், தற்போது ‘விஜய் 62’ என்று அழைக்கப்பட்டு வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு, மலையாளப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்த கிரீஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.
ஸ்ரீகர் பிரசாத் எடிட் செய்ய, சந்தானம் கலை இயக்குநராகப் பணியாற்றுகிறார். ‘மெர்சல்’ படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்துக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இசையமைக்கிறார். படத்தின் ஷூட்டிங் இந்த மாத இறுதியில் தொடங்கவுள்ள நிலையில், ஒரு பாடலுக்கு இசையமைத்து முடித்துவிட்டாராம் ஏ.ஆர்.ரஹ்மான்.