திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 18 மே 2021 (21:16 IST)

தடுப்பூசி போட்டு கொண்ட விக்னேஷ் மற்றும் நயன்தாரா!

தடுப்பூசி போட்டு கொண்ட விக்னேஷ் மற்றும் நயன்தாரா!
சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதை அடுத்து தடுப்பூசி போட்டுக் கொள்ளும் விழிப்புணர்வை மாநில அரசின் சுகாதாரத்துறை ஏற்படுத்தி வருகிறது
 
அது மட்டுமின்றி திரையுலக பிரபலங்கள் பலர் தங்கள் தடுப்பூசி போட்டுக் கொண்டு அதன் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பதிவு செய்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். குறிப்பாக சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தடுப்பூசி போட்டுக் கொண்ட புகைப்படம் வெளியானதையடுத்து ஆயிரக்கணக்கானோர் தடுப்பூசியை வலியவந்து போட்டுக் கொண்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சற்றுமுன் விக்னேஷ் சிவன் மற்றும் அவரது காதலியும் நடிகையுமான நயன்தாரா ஆகிய இருவரும் தடுப்பூசி போட்டுக் கொண்டனர். இது குறித்த புகைப்படங்கள் தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது