அஜித் படத் தயாரிப்பாளரின் செலவைக் குறைக்கும் ஆர்.ஜே. பாலாஜி

Sinoj| Last Updated: செவ்வாய், 18 மே 2021 (18:55 IST)

தமிழ் சினிமாவில் இளம்நடிகர் ஆர்.ஜே,பாலாஜி அடுத்த படத்தை ஒரே ஷெட்யூவில் முடிக்கத்திட்டமிட்டுள்ளதாகத் தகவல்வெளியாகிறது.

எஃப்,எம்.எல்-ல் ஆர்.ஜே ஆகவும், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து நடிகராகி பின்னர் இயக்குநர் அவதாரம் எடுத்தவர் ஆர்.ஜே.பால்ஜி. இவர் இயக்கத்தில் வெளியான முதல் படல் எல்.கே.ஜி பெரும் வெற்றி பெற்றது.


இதையடுத்து, முன்னணி நடிகை நயன்தாரா நடிப்பில் இவர் இயக்கிய மூக்குத்தி அம்மான் கடந்தாண்டு கொரொனா ஊரடங்கு காலத்தில் ஓடிடி தளத்தில் வெளியாகிப் பெரும் வெற்றி பெற்றது. எனவே ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்த படத்திற்கு எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

இந்நிலையில், கடந்த 2018 ஆம் ஆண்டு இந்தியில் ஆயுஸ்மான் குரானா நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த பதாய் ஹோ என்ற படத்தின் தமிழ் ரீமேக் ஆர்.ஜே.பாலாஜி இயக்கவுள்ளதாகவும் இதில் ஆயுஸ்மான் கதாப்பாத்திரத்தில் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கவுள்ளாதாகவும் கூறப்படுகிறது.இப்படத்தை அஜித்தின் வலிமை பட தயாரிப்பாளர் போனி கபூர்
தயாரிக்கவுள்ளதால், இதன் முதற்கட்ட படப்பிடிப்பு கோவையில் நடைபெற உள்ளதாகக் தெரிகிறது.

மேலும் இப்படத்தை ஒரே கட்டமாக ஆர்.ஜே.பாலாஜி முடித்து திரைக்குக் கொண்டுவரவுள்ளதாகவும் தகவல் வெளியாகிறது.இதில் மேலும் படிக்கவும் :