செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 20 ஏப்ரல் 2022 (08:45 IST)

”நெருப்பா இருக்கு”… ’அஜித் 61’ டிசைன்ஸ்?... விக்னேஷ் சிவனின் viral post!

அஜித் H வினோத் இயக்கத்தில் இப்போது “அஜித் 61” படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

அஜித் – போனி கபூர் – H வினோத் ஆகிய மூவரும் மூன்றாவது முறையாக இணையும் ’அஜித் 61’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் ஐதராபாத்தில் சிறிய பூஜையுடன் தொடங்கியது. அங்கு சென்னை அண்ணா சாலை போன்ற செட் போடப்பட்டு அதில் வங்கிகளில் நடக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக சொல்லப்படுகிறது.

இதுவரை இந்த படத்தின் அதிகாரப்பூர்வ போஸ்டர்கள் எதுவும் வெளியாகவில்லை. ஆனால் ரசிகர்கள் அஜித்தின் புகைப்படங்களை விதம் விதமாக தங்கள் ரசனைக்கேற்ப உருவாக்கி பகிர்ந்து வருகின்றனர். அப்படி ஒரு ரசிகர் வடிவமைத்த அஜித்தின் புதிய போஸ்டர்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து “fire ma” என பாராட்டியுள்ளார்.