1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Caston
Last Modified: வெள்ளி, 8 ஜூலை 2016 (16:05 IST)

சொல்லித் தொலையேன்மா.... நயன்தாரா காதலரின் காதல் பாடல்

போடா போடி படம் கிடப்பில் போடப்பட்ட வருடங்களில் இயக்குனர் விக்னேஷ் சிவனை பொருளாதாரரீதியாக காப்பாற்றியது, அவரது பாடல் எழுதும் திறமை. இன்றைய இளைஞர்களை சுண்டியிழுக்கும் வார்த்தை தோரணங்களை அசராமல் அடுக்கத் தெரிந்தவர். இவர் இயக்கிய நானும் ரௌடிதான் படத்தில் வரும், தங்கமே பாடல் இவர் எழுதியதுதான்.


 
 
யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கும் யாக்கை படத்திலும் ஒரு பாடல் விக்னேஷ் சிவன் எழுதியுள்ளார். சொல்லித் தொலையேன்மா என்று தொடங்கும் அந்தப் பாடலில்,
 
உனக்கு வெயிட் பண்ணி என் பாடி வீக் ஆகுது...
பேஸ்மெண்ட் ஷேக் ஆகுது...
ஹார்ட்(டு) பிரேக் ஆகுது...
 
-என இன்றைய காதலிக்கும் இளைஞர்களின் மனதை பிரதிப்பலிப்பது போல் வார்த்தைகள் உள்ளன.
 
இந்தப் பாடலை தனுஷ் பாடியிருப்பது இன்னொரு சிறப்பம்சம்.