ராஜ் குந்த்ராவுக்கு கால் பண்ணுங்க: கவர்ச்சி புகைப்படம் வெளியிட்ட பாலிவுட் நடிகர்!
பிரபல பாலிவுட் நடிகரான வித்யூத் ஜம்வால் வடிவழகனாகவும், தற்காப்புக் கலைஞராகவும் உள்ளார். இந்தி, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இவர் தமிழில் துப்பாக்கி , அஞ்சான் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். மேலும் விஜய் விருது, பிலிம்பேர் விருது ஆகியவற்றைப் பெற்றவர்.
ஹேண்ட்ஸம் ஹீரோ , ஹாட் அழகனாக பாலிவுட் ரசிகர்களை கவரும் வித்யூத் ஜம்வால் தனது முகநூல் பக்கத்தில் கவர்ச்சி போட்டோ ஷூட் நடத்திய புகைப்படங்களை வெளியிட்டு சர்ச்சை கிளப்பியுள்ளார். நடிகைகளுக்கு இணையாக வைரலாகும் இந்த கவர்ச்சி புகைப்படத்தை கண்ட ரசிகர்கள் "ராஜ் குந்த்ராவுக்கு கால் பண்ணுங்க" அவர் தான் உங்களுக்கு சரியான ஆளு " என கிண்டல் அடித்து வருகின்றனர். நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவரான ராஜ் குந்த்ரா ஆபாச பட வழக்கில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.