திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By papiksha joseph
Last Updated : செவ்வாய், 16 மே 2023 (20:52 IST)

விடுதலை படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா? வாய்பிளக்கும் கோலிவுட்!

பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி நாயகனாக நடித்து அண்மையில் வெளியான திரைப்படம் ‘விடுதலை’. இந்த படத்தின் படப்பிடிப்பு சத்தியமங்கலம் காட்டுப் பகுதியிலும் மற்ற சில பகுதிகளையும் படமாக்கப்பட்டு வெளிவந்தது. இந்த படத்தில் சூரி ஹீரோவாகவும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்திலும் நடித்தார்.
 
மேலும், ஹீரோயினாக பவானி ஸ்ரீ, கவுதம் மேனன், ராஜிவ் மேனன், சேத்தன் உள்ளிட்டோர் கூட முக்கிய ரோலில் நடித்திருந்தனர். இந்நிலையில் இப்படம் விமர்சன ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றதோடு வசூலிலும் கலெக்ஷன்ஸ் வாரி குவித்தது. இந்நிலையில் இப்படம் இதுவரை ரூ. 60 கோடி வரை வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது மாபெரும் சாதனையாகவே பார்க்கப்படுகிறது. விரைவில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகலாம்.