செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: செவ்வாய், 11 ஜூன் 2024 (07:21 IST)

தீபாவளிக்கு ரிலீஸாகிறதா வெற்றிமாறனின் விடுதலை 2… லேட்டஸ்ட் தகவல்!

கடந்த ஆண்டு மார்ச் 31 ஆம் தேதி வெளியான வெற்றிமாறன் இயக்கிய விடுதலை திரைப்படத்தின் முதல் பாகம் நேர்மறையான விமர்சனங்களையும் பாராட்டுகளையும் பெற்றது. இதையடுத்து வெற்றிமாறனின் ஹிட் பட லிஸ்ட்டில் விடுதலையும் இணைந்தது. இரண்டாம் பாகத்துக்கான ஷூட்டிங் தொடங்கி இறுதிகட்டத்தில் உள்ளது.

இரண்டாம் பாகத்தில் சூரிக்குக் காட்சிகள் மிகவும் குறைவு என்பதால் அவர் சம்மந்தப்பட்ட காட்சிகளுக்கான ஷூட்டிங் சமீபத்தில்  தகவல்கள் வெளியாகியுள்ளன. இப்போது விஜய் சேதுபதி சம்மந்தப்பட்ட காட்சிகளை வெற்றிமாறன் படமாக்கி வரும் நிலையில் வெற்றிமாறன் முடிவே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்திக் கொண்டுவருகிறார் என சொல்லப்பட்டது.

இதற்கிடையில் சூரி கதாநாயகனாக நடித்த கருடன் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றுள்ளது. இதனால் விடுதலை 2 படத்தின் மீது எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் படத்தை தீபாவளிக்கு வெளியிட முயற்சி செய்து வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் ஏற்கனவே தீபாவளிக்கு அஜித்தின் ‘விடாமுயற்சி’ மற்றும் சூர்யாவின் ‘கங்குவா’ உள்ளிட்ட நான்கு படங்கள் ரிலீஸ் ஆக உள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் விடுதலை 2 தீபாவளிக்கு ரிலீஸ் ஆகுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.