ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 8 ஜூன் 2024 (15:05 IST)

அன்பான மகள் வந்தததால் அம்பானி ஆகிறேன்… மகாராஜா பட அனுபவத்தைப் பகிர்ந்த வைரமுத்து!

விதார்த், பாரதிராஜா ஆகியோர் நடிப்பில் உருவான குரங்கு பொம்மை படத்தை இயக்கியவர் நித்திலன். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் அடுத்து அவர் விஜய் சேதுபதி நடிக்கும் மகாராஜா இயக்கி வருகிறார். இந்த படத்தின் ஷூட்டிங் கடந்த ஆண்டு மத்தியில் தொடங்கி இறுதியில் முடிவடைந்தது. இது விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக உருவாகி வருகிறது.

இந்த படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ், நட்ராஜ் நட்டி மற்றும் பாய்ஸ் மணிகண்டன் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.  படத்துக்கு ஆகானாஷ் லோக்நாத் இசையமைக்கிறார். இந்த படம் ஒரு ஆக்‌ஷன் படமாக உருவாகியுள்ளது. ஷூட்டிங் முடிந்து ஒரு ஆண்டுக்கும் மேலாக ரிலீஸ் ஆகாமல் இருந்த இந்த படம் இப்போது ஜூன் 14 ஆம் தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் இந்த படத்தின் முதல் சிங்கிள் பாடல் சமீபத்தில் ரிலீஸாகி கவனம் பெற்றது. இந்த பாடலை எழுதியுள்ள பாடல் ஆசிரியர் வைரமுத்து அந்த அனுபவம் பற்றி முகநூலில் பகிர்ந்துள்ளார்.

அவரது பதிவு:-
விஜய் சேதுபதி
ஒரு தனிமைத் தந்தை

உறவற்ற வெறுமை
மகளென்ற பந்தத்தால்
நிறைந்து வழிகிறது

முடிதிருத்தும்
தொழிலாளி அவர்

ஆனால், உலகத்தின்
பெரும்பணக்காரர்களுள்
தானும் ஒருவன் என்று
பெருமை பேசுகிறார்

எப்படி?

‘அன்பான மகள்வந்ததால்
அம்பானி நானாகிறேன்’

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில்
அஜனீஷ் லோக்நாத் இசையில்
சித் ஸ்ரீராம் குரலில்
மஹாராஜா படத்தின்
ஒரு தனிப்பாடல் இது

மூன்றுமுறை கேளுங்கள்
முழுச்சாரம் இறங்கும்