ஏமாற்றிய டன்கி, சலார்… விதார்த்தின் ‘ஆயிரம் பொற்காசுகள்’ படத்துக்கு கூடும் திரைகள்!
அறிமுக இயக்குனர் ரவி முருகையா இயக்கத்தில் “மைனா” விதார்த், “பருத்தி வீரன்” சரவணன், ஜானவிகா ஆகியோர் நடிப்பில் ஆயிரம் பொற்காசுகள் படம் உருவாகியுள்ளது. மேலும் இப்படத்தில் வெற்றிவேல் ராஜா, ஹலோ கந்தசாமி, ஜார்ஜ் மரியான், பாரதி கண்ணன், செம்மலர் அன்னம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இயக்குனராகவும் தயாரிப்பாளராகவும் விநியோகிஸ்தராகவும் அறியப்படும் கேயார் தனது கேஆர் இன்போடெயின்மெண்ட் சார்பில் இப்படத்தை தயாரித்துள்ளார். ஜோஹன் இசையமைக்ககும் இப்படத்திற்கு பானுமுருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் கடந்த டிசம்பர் 22 ஆம் தேதி ரிலீஸ் ஆனது.
மிகக்குறைந்த திரைகளில் ரிலீஸான இந்த திரைப்படம் பாசிட்டிவ்வான விமர்சனங்கள் மூலமாக இப்போது ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது. அதே நாளில் ரிலீஸான சலார் மற்றும் டன்கி ஆகிய திரைப்படங்கள் தமிழகத்தில் பெரிதாக தாக்கத்தை ஏற்படுத்தாததால் இப்போது ஆயிரம் பொற்காசுகள் திரைப்படத்துக்கு கூடுதலாக திரையரங்குகள் ஒதுக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.