வியாழன், 23 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 18 டிசம்பர் 2023 (18:05 IST)

கான்சார் செவக்கணும்...அவங்க ரத்தத்தால...'' 'சலார்' பட 2வது டிரைலர் ரிலீஸ்!

salaar -prabash- prashanth neels
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர் பிரபாஸ். இவரது சலார் படத்தின் டிரைலர் இன்று ரிலீஸாகியுள்ளது.
 
இந்த நிலையில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன், டினு ஆனந்த், ஈஸ்வரி ராவ், ஜெகபதி பாபு நடிப்பில் உருவாகியுள்ள படம் சலார்.
 
இப்படத்தின் டீசர், டிரைலர் சமீபத்தில் வைரலான நிலையில், வரும் 22 ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இப்படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ள    நிலையில் 2 மணி  நேரம் 55 நிமிடம் ரன்னிங் டைம் ஆகும்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படத்தின் டிரைலர், தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இப்படத்தில் முக்கிய  வேடத்தில் ப்ரிதிவிராஜ் நடித்துள்ளார். அவரது உயிர் நண்பன் கதாப்பாத்திரத்தில் பிரபாஸ் நடித்துள்ளதாக இந்த டிரைலரை பார்க்கும் போது தெரிகிறது.''சுல்தான் தனக்கு எந்தப் பிரச்சனை வந்தாலும் தன் பலமான படைகளிடம் கூறாமல்,  ஒரே ஒருத்தனிடம் மட்டும் கூறினார். அவன் எல்லாவற்றையும் அவனுக்காக கொண்டு வந்தான்'' என்ற டயலாக் கவனம் பெற்றுள்ளது.கான்சாரில் நடக்கும்  யுத்தமும், ஆட்சியும் இதற்காக நடக்கும் சண்டை- இரு உயிர்  நண்பர்கள் பரமவிரோதியாக மாறியுள்ள போக்கு இதுதான் படத்தின் கதை என தெரிகிறது.
 
இந்த டிரைலரை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.