செவ்வாய், 17 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: திங்கள், 14 அக்டோபர் 2024 (10:00 IST)

வேலை நாளில் காத்து வாங்கும் வேட்டையன் டிக்கெட் பதிவு… மூன்று நாள் தொடர் மழை வேற – தப்பிக்குமா?

ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையிக், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது.

படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைக் கூறினர். குறிப்பாக படத்தில் பல இடங்களில் லாஜிக் இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. மேலும் மாஸான காட்சிகளில் லாஜிக் இல்லை என்றாலும், ரஜினியின் முந்தைய படங்களில் இருந்த ஒரு ஃபயர் சுத்தமாக இல்லை என்றும் சொல்லப்படுகிறது.

இந்நிலையில் முதல் வார இறுதி நாட்களைக் கடந்து இன்று இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைக்கிறது வேட்டைடன். ஆனால் வேலைநாளான இன்று சென்னையின் முக்கியத் திரையரங்கான சத்யம் திரையரங்கில் கூட படத்துக்கான டிக்கெட் பதிவு டல்லடிக்கிறது. அடுத்தடுத்த மூன்று நாட்கள் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்யும் என சொல்லப்பட்டுள்ள நிலையில் தியேட்டருக்கு மக்கள் வருவது குறையும். அதனால் வேட்டையன் படத்தின் வசூல் கடுமையாக பாதிக்கப்படும் என சொல்லப்படுகிறது.