ரஜினி ராக்கெட்டில் கூட வரலாம்… நான் அதில் லாஜிக் பார்க்கவில்லை – இயக்குனர் ஞானவேல் பதில்!
ரஜினி நடிப்பில் ஞானவேல் இயக்கத்தில் உருவான வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி ரிலீஸானது. படத்தில் துஷாரா விஜயன், ரித்திகா சிங், மஞ்சு வாரியர், ராணா டகுபதி, பஹத் பாசில் மற்றும் அமிதாப் பச்சன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையிக், எஸ் ஆர் கதிர் ஒளிப்பதிவில் வேட்டையன் படம் உருவாகியுள்ளது.
படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ரிலீஸான நிலையில் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களைக் கூறினர். குறிப்பாக படத்தில் பல இடங்களில் லாஜிக் இல்லை என்று குற்றச்சாட்டுகள் எழுந்தன. க்ளைமேக்ஸ் காட்சியில் நீதிமன்றத்தில் இருக்கும் ரஜினி உடனடியாக வில்லனின் இடத்துக்கு சென்று மாஸாக உட்கார்ந்திருப்பார். அது எப்படி என்று பலரும் ட்ரோல் செய்ய ஆரம்பித்தனர்.
இதற்கு விளக்கம் அளித்துள்ள ஞானவேல் நான் அந்த காட்சியை ரஜினிக்காகதான் வைத்தேன். ரஜினி ஹெலிகாப்டரில் என்ன, ராக்கெட்டில் கூட வரலாம். நான் கண்டெண்ட்டில் லாஜிக் பார்த்து உருவாக்கியுள்ளேன். ஆனால் ரஜினி போன்ற ஒரு மாஸ் நடிகரின் படத்தில் எப்படி லாஜிக் பார்க்க முடியும். அந்த இடத்தில் லாஜிக் பார்த்தால் ரஜினி நீதிமன்றத்தில் இருந்து கிளம்பி, அந்த இடத்துக்கு வருவதை 2 மணி நேரம் காட்டவேண்டும். அதை எப்படி நான் திரையில் காட்ட முடியும்” எனக் கூறியுள்ளார்.